×

ரோபோடிக்ஸ் போட்டியில் தேனி டிகேஎஸ் இன்ஜி., கல்லூரி தேர்ச்சி

தேனி, நவ. 5: ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டியில் தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறை உதவியுடன் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐஐடி மூலமாக இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான இ-எந்திரா எனும் ரோபோடிக்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான ரோபோடிக்ஸ் போட்டியில் இக்கல்லூரியை சேர்ந்த 48 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவ, மாணவியர்களும், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, கல்லூரி செயலாளர் சந்திரசேகரன், கல்லூரி பொருளாளர் இளங்கோ, கல்லூரி முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ்நாராயணன், குழுத் தலைவர் மருதராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தேனி கம்மவார் சங்க உறுப்பினர்கள் பாராட்டினர்.


Tags : TKS Eng ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு