×

பெரியகுளம் நகராட்சி 2 டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம் விருது

பெரியகுளம்,நவ.5: பெரியகுளம் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக மாரிமுத்து மற்றும் பழனிவேல் ஆகியோர் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய இரண்டு டிரைவர்களையும் பாராட்டி சிறந்த சேவைக்கான தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) தினேஷ்குமார் கலந்து கொண்டு டிரைவர்கள் மாரிமுத்து மற்றும் பழனிவேல் ஆகிய இருவருக்கும் தங்கப்பதக்கத்தினை வழங்கி இருவரையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Drivers ,Periyakulam Municipal 2 ,
× RELATED திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை...