×

அறநிலையத்துறையில் புதிய பணியிடங்களை நிரப்பினாலும் கோயில் வருவாயில் சம்பள செலவு 40% மேல் இருக்கக் கூடாது: ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கமிஷனர் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: * புதிய பணியிடங்கள் கோரும் போது அதற்கான காரணங்கள் குறிப்பிட வேண்டும். இதற்கு இணை ஆணையர் மனிதவள தணிக்கை மேற்கொண்டு அதற்கான காரணங்களுடன் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.* பணியிடங்களை ஒப்படைப்பு செய்யப்படும் இனங்களில் பழைய பணியிடங்களுக்கு பதிலாக புதிய பணியிடங்கள் கோரப்படும்போது, என்ன காரணங்களால் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. அது சரிதானா என இணை ஆணையர் கூர்ந்தாய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும்.* தத்தம் கோயிலில் உள்ள அனைத்து பணியிடங்களும் ஆணையர் அங்கீகாரத்திற்கு விடுபடாமல் சேர்க்கப்பட்டுள்ளதா, என சரிபார்த்து அறிக்கை அனுப்ப வேண்டும்.* எக்காரணத்தினை கொண்டும் 40 சதவீதம் மேல் சம்பள செலவினம் வரக்கூடாது. 40 சதவீதத்துக்குள் அடக்கப்பட வேண்டும்.* 40 சதவீதத்துக்கு மேல் சம்பள செலவினம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தொகுப்பூதியத்தில் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் என கணக்கீடு செய்து கொள்ளலாம். ஆனால், வருமானம் உயரும் பட்சத்தில் தொகுப்பூதியத்தில் கணக்கிடப்பட்ட நபருக்கு சம்பளம் நிர்ணயம் செய்து அளிக்கப்பட வேண்டும்.* ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும் முன்மொழிவுகள் அனைத்தும் சம்பள விகிதாச்சார பட்டியலில் சம்பந்தப்பட்ட மண்டல தணிக்கை அலுவலர்/உதவி தணிக்கை அலுவலர் சான்று பெற்று அனுப்பி வைக்கப்பட வேண்டும்.* ஆணையருக்கு அனுப்பபடும் முன்மொழிவுகளில் தக்கார் தீர்மானம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.* பட்டியலில் சேர்ந்த/சேராத அனைத்து கோயில்களுக்கும் பணியிடப்பட்டியல் மற்றும் சம்பளம் ஏற்ற முறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உள்ளதால் காலம் தாழ்த்தாது விரைவாக அறிக்கையினை அனுப்ப அனைத்து சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அறநிலையத்துறையில் புதிய பணியிடங்களை நிரப்பினாலும் கோயில் வருவாயில் சம்பள செலவு 40% மேல் இருக்கக் கூடாது: ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Zonal Co- ,State Department ,Kumarubarubaran ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய...