×

விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

வெள்ளக்கோவில்,நவ.5: வெள்ளக்கோவில் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக இணைய வரும் 8ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இதுவரை இத்திட்டத்தில் சேர்ந்திடாத விவசாயிகள் வரும் 8ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். வெள்ளகோவில் வட்டாரத்தில் மொத்தம் 17 வருவாய் கிராமங்கள் உள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பிக்க உள்ள விவசாயிகள் இக்கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரிலோ தங்களது விண்ணப்பங்களை கொடுக்கலாம். விவசாயிகள் இணைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் (தொலைபேசி எண்ணுடன்) வங்கி புத்தக நகல் மற்றும் தங்களது நிலத்திற்கான சிட்டா ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். தற்போது இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயர் சரி செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு முகாம்கள் வேளாண்மைத் துறையின் மூலம் வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று கொண்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து இதுவரை முதல்தவணைகூட பெறாத விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டையுடன் அருகாமையில் உள்ள பொது சேவை மையம் அல்லது வெள்ளகோவில் வட்டார வேளாண்மைத் துறை அலுவலகத்தினை அணுகி சரிசெய்திடுலாம். மேலும் விவசாயிகள் தாங்களே தங்களுக்கு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய விரும்பினால் இதற்கான பிரிவினை தேர்வு செய்து இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர் 94439 46072 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்