×

ேகாயில் நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு கொடுக்கக்கூடாது இந்து முன்னணி கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், நவ.5 : கோயில் நிலங்களை பட்டா போட்டு வழங்கக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில், துணைத்தலைவர் ராஜேஷ்வரன், மாநில பேச்சாளர் அசோகன், மாவட்ட செயலாளர்கள் நம்பிராஜன், ரவி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  குமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் பராமரிப்பு மற்றும் பூஜை ஆகியவற்றுக்காக, கோயில்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சுவாமி பெயரில் முன்னோர்களால் கொடுக்கப்பட்டதாகும். இந்த நிலங்கள் அனைத்தும் ேகாயிலுக்கு சொந்தமானவை. அரசுக்கு சொந்தமானவை அல்ல.

இந்தநிலையில் கோயில் நிலங்களை ஆக்ரமித்தவர்களுக்கு பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது வழக்குக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்திலும் இதையே தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோயில் நிலங்களை ஆக்ரமித்தவர்களுக்கே விற்கவும், இலவசமாக வழங்குவதற்கும் அரசு எடுத்துள்ள முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ேமலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தையும் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,land ,Kay ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...