×

மாவட்டம் முழுவதும் கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன பொருட்கள் சேதம்

மேலூர்/ திருமங்கலம், நவ.1: மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பொருட்கள் நாசமாயின.
மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால் கொட்டாம்பட்டி அருகில் உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் அடுக்கு மாடி வீடு உட்பட 7 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் நேற்று மழையால் ஊறி போயிருந்த 11 வீடுகள் இடிந்து விழுந்தன.

உலகுபிச்சான்பட்டியை சேர்ந்த கனகவள்ளி, திருவாதவூர் கோட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி, மருதூரை சேர்ந்த முனிச்சாமி, தனம், நரசிங்கம்பட்டியை சேர்ந்த முத்துமணி, செல்லையா, கடுமீட்டான்பட்டியை சேர்ந்த நல்லியப்பன், கிடாரிபட்டியை சேர்ந்த கமர்நிஷா, பாத்திமா பீவி, முத்துக்குமரன் உள்பட மொத்தம் 11 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன.

Tags : houses ,district ,
× RELATED கடலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை:...