×

ரயிலில் தென்காசிக்கு எடுத்து செல்ல முயன்ற 29 கிலோ வெள்ளி பறிமுதல்

மதுரை, ஏப். 24: ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற 29 கிலோ வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவடைந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் எனவும், மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லக்கூடிய பயணிகள் ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் அமர்ந்திருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் தென்காசியை சேர்ந்த முருகன் மற்றும் சாகுல்ஹமீது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 29 கிலோ 200 கிராம் எடை கொண்ட வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. அந்த நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் உரிய ஆவணங்களின்றி, வெள்ளி நகைகளை தென்காசிக்கு கொண்டு செல்ல முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, மதுரை வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தினர். சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்து 928 அபராதம் விதித்து, அபராத தொகையை செலுத்திய பின்னர் நகைகளை திருப்பி ஒப்படைத்தனர்.

The post ரயிலில் தென்காசிக்கு எடுத்து செல்ல முயன்ற 29 கிலோ வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Madurai ,Tamil Nadu ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...