×

டிஎஸ்எம் கல்வியியல் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிப்பு

கள்ளக்குறிச்சி, நவ. 1:    சின்னசேலம் அடுத்த கனியாமூர் டிஎஸ்எம் கல்வியியல் கல்லூரியில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான நேற்று தேசிய ஒற்றுமை நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர்  மனோகர்குமார்சுராணா தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் லதா வரவேற்றார். கல்லூரி பேராசிரியர்கள் அண்ணாகலியன், ராமு, தேவி, மற்றொரு தேவி, செல்வம், பிரபாகரன்,  சிவராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணி காப்பேன் என்றும், நல்லியல்புகளை எனது மக்களிடையே பரப்புவதற்கு அயாராது பாடுபடுவேன்  என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியை கல்லூரி துணை முதல்வர் பாலசுந்தரம் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.Tags : National Unity Day ,DSM College of Education ,
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...