×

தண்ணீர் தொட்டிகளில் ‘அபேட்‘ மருந்து ஊற்றப்படுகிறதா?

கோவை, அக். 31: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ‘அபேட்‘ மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதை மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மத்திய மண்டலம், 54-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதியிலுள்ள சரோஜினி வீதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி கூறுகையில், ‘‘டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் அவர்கள் பெயர், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் எங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் முதல்கட்டமாக சுற்றி 5 0மீட்டர் சுற்றளவுக்கு மாஸ் கிளினிங் என சொல்லப்படுகின்றன முற்றிலும் தூய்மை பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு டெங்கு கொசுக்கள் உருவாகாதவாறு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மாநகராட்சி பகுதிகளில் முழுவதுமே மண்டல வாரியாக அதிகாரிகள் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’’ என்றார்.

Tags : Abate ,
× RELATED திருத்தங்கல் மண்டலத்தில் நோய்...