×

மேல்புறத்தில் பைக் மோதி 2 ஆசிரியைகள் காயம்

மார்த்தாண்டம், அக். 25: குலசேகரம் செறுதிகோணம் பகுதியை சேர்ந்தவர் சைனி(39). அதே பகுதி நாககோடு பகுதியை சேர்ந்தவர் ஷீபா(39). இருவரும் குலசேகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மேல்புறத்தில் பயிற்சி சான்றிதழ் வாங்க இரண்டு பேரும் சென்றனர். மேல்புறம் அரசு பள்ளி அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஆசிரியைகள் 2 பேர்மீதும் மோதினார். இதில் கீழே விழுந்து 2 பேரும் காயம் அடைந்தனர். மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Teachers ,
× RELATED ஸ்டிரைக்கில் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஆப்சென்ட் போடப்படும்