மாநில பெஞ்ச்பிரஸ் போட்டி: மேலகரம் வீரர் வெற்றி

தென்காசி, அக். 25:  கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான பவர் லிப்டிங் பெஞ்ச்பிரஸ் போட்டி நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நெல்லை மாவட்ட அளவில் நடந்த தகுதி சுற்றில் மேலகரம் மனோஜ்குமார், 120 கிலோ சீனியர் எடை பிரிவில் பங்கேற்று மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மனோஜ்குமாரை மாவட்ட பவர்லிப்டிங் செயலாளர் உதயகுமார், தென்காசி சண்முகசுந்தரம், பாரத் உடற்பயிற்சி கழக பயிற்சியாளர் குத்தாலிங்கம், துணை பயிற்சியாளர்கள் முருகன், கணேசன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : State Bench Press ,Tournament ,
× RELATED அகில இந்திய அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி