×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கொச்சுவேளி இடையே அக்.26ல் சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாகர்கோவில், அக்.24:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு ஒரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் தாம்பரம் முதல் கொச்சுவேளி இடையே வரும் 26ம் தேதி இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 06031 தாம்பரம்- கொச்சுவேளி முன்பதிவு இல்லாத அந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 26ம் தேதி காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு கொச்சுவேளி சென்றடையும். இரண்டாம் வகுப்பு ெசயர் கார் 10, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 9ம் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும்.  இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Tambaram ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...