×

காவலர் வீரவணக்கநாள் எஸ்பி ஜெயக்குமார் அஞ்சலி

விழுப்புரம், அக். 23:
காவலர் வீரவணக்க நாளையொட்டி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் காவலர் வீரவணக்கநாள் ஆண்டு தோறும் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மூன்று ரவுண்டுகள் 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து மற்ற போலீசாரும் அஞ்சலி செலுத்தினார்கள்.




Tags : Weerawanakanna ,SP ,Jayakumar Anjali ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’