×

புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மூன்று மடங்கு உயர்த்தியது கண்டனத்திற்குரியது

சூரமங்கலம், அக்.16: புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர்களிடையே மின்சார வாரியம் டெபாசிட் தொகையை மூன்று மடங்காக உயர்த்தியதற்கு மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் மகாசபை கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கமிட்டியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வக்கீல் செல்வம் தலைமை வகித்து கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் இக்பால் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர்களிடையே மின்சார வாரியம் டெபாசிட் தொகையை மூன்று மடங்காக உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட் அருகில் மத்திய அரசு ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு வேலைகளை துவக்கி முழுமை பெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி, அயோத்தியபட்டிணம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பணியினை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய- மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி பணியினை துரிதப்படுத்த வேண்டும். கூட்டத்தில் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் அசோகமித்திரன், பொருளாளர் சரவணன், இணைச் செயலாளர் குணசேகரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் சிவாஜி, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அஸ்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். சேலம் மாநகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா