கடலூர், அக். 4: பவ்டா நிறுவனம் 2.10.1985ல் டாக்டர் ஜாஸ்லின் தம்பியால் துவங்கப்பட்டது. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 4 பணியாளர் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு, பின்னர் படிப்படியாக விரிவடைந்து தற்போது தமிழகத்திலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண், பெண் சுயஉதவிக்குழுக்கள், விதவைகள், விவசாயிகள், மாட்டுவண்டி தொழிலாளர்கள், இவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபடுவது, வறுமையில்லாத நிலையான சமுதாயத்தை உருவாக்குதல், இவர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக் பாடுபடுவது என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. மேலும் கடந்த 15 ஆண்டு
களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக பவ்டா சிபிஆர் பவுன்டேஷன் என்ற அமைப்பின் உதவியுடன் காடுகள் வளர்த்தல், இயற்கை பாதுகாப்பு சார்ந்து செயல்பட்டு வருகிறது. பவ்டா தற்போது 34 ஆண்டுகள் முடிந்து 35ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் இயற்கை வளத்தை முன்னிட்டு கடலூர் கே.என்.சி மகளிர் கல்லூரியிலும், ராம்பாக்கம் துவக்கப்பள்ளி மற்றும் சாலை ஓரங்களிலும் மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் கடலூர் மண்டல பொது மேலாளர் மகேஸ்வரி மற்றும் கடலூர் கிளை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.