×

கேட்பாரற்று கிடந்த செல்போனை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

திருவெண்ணெய்நல்லூர், அக். 4: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(35). இவர் அரசூர் பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவரும், நண்பர் இளையராஜாவும் வீட்டிலிருந்து ஸ்டூடியோவுக்குசென்ற போது அரசூர் நான்கு வழிசாலை சந்திப்பு அருகே சாலையோரம் செல்போன் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. அதைக்கண்ட அவர்கள் இருவரும் எடுத்து பத்திரமாக திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்திற்கு சென்றுஇன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் செல்போனை தவறவிட்டது யார்? எந்தஊரைச்சேர்ந்தவர் என்று விசாரணை செய்யப்பட்டது. அதில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த மோகன்என்பவர் அரசூர் பகுதிக்கு பைக்கில் செல்லும் போது பைக்கின் முன்பக்கமாக வைத்திருந்த செல்போன்  எதிர்பாராதவிதமாக தவறிவிட்டதுதெரியவந்துள்ளது. இதையடுத்து செல்போன் உரிமையாளரை காவல்நிலையத்திற்கு அழைத்து நேரில் விசாரணை செய்து செல்போன்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த செல்போனை எடுத்துசென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்களுக்கு இன்ஸ்பெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை