×

திண்டிவனத்தில் வாகன சோதனை தீவிரம்

திண்டிவனம், அக்.   2: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வருகிற 21ம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால்  அரசியல் கட்சியினர் பணம்  மற்றும் பரிசு பொருட்களை எடுத்து செல்வதை தடுக்க திண்டிவனத்தில் உள்ள முக்கிய சாலையான சேலம்-சென்னை, புதுச்சேரி, வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய நெடுஞ்சாலைகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று திண்டிவனம் மரக்காணம் சாலையில் பிடிஓ சுரேஷ்குமார் தலைமையிலான  நிலையான கண்காணிப்புக் குழுவினர் தலைமை காவலர்கள் அய்யனார், காளிதாஸ் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் இருசக்கர வாகனங்கள், கார், கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம்-நகரி திண்டிவனம் -...