×

பங்காரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

சின்னசேலம், அக். 2: சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பங்காரம் கிராமம். இங்கு 6 வார்டுகள் உள்ளன. இந்த கிராமத்தில் சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். மேலும் இங்கு குடிநீர் வசதிக்கென 2 கிணறு மற்றும் 6 மினிடேங்குகளும் உள்ளன.  பங்காரத்தில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக போதிய மழையில்லாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் இந்த கிராமத்தில் உள்ள கிணறு மற்றும் போர்வெல்களில் போதிய அளவில் தண்ணீர் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் காடு காடாக அலைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி கோட்ட பகுதியில் சுமாரான மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுபோன கிணறு மற்றும் போர்வெல்களில் தற்போது நீர் உள்ளது.

இந்த ஊரில் உள்ள 2 கிணறுகளில் ஒரு கிணறு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் மற்றொரு கிணற்றில் நீர் இருந்தும் பாழடைந்து உள்ளது. அந்த கிணற்றில் தூர் வாரி சரிசெய்ய வேண்டும்.  அதைப்போல பழுதாகி உள்ள போர்வெல் மோட்டார்களை சீரமைத்து தர வேண்டும் என்று கடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் சரிசெய்யவில்லை. தற்போது போதிய அளவில் நீர் ஊற்று உள்ளதால் போர்க்கால அடிப்படையில்
பழுதான போர்வெல்களை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pangaram ,village ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...