×

கடல் மணல் திருடிய ஆட்டோ சிக்கியது

நித்திரவிளை, அக் 2: கொல்லங்கோடு  எஸ்ஐ மகேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம் அம்பலக்குளம் கரை  என்னுமிடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே ஒரு பயணிகள்  ஆட்டோ வந்துள்ளது, போலீசார் நிற்பதை பார்த்ததும் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை  நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார், சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை  செய்த போது சாக்கு மூட்டையில் கடல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிந்து கிராத்தூர் மணலிவிளை  பகுதியை சேர்ந்த ரமேஷ்(29), என்பவரை கைது செய்தனர், கிராத்தூர் கல்லுபொற்றை  பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.Tags :
× RELATED உரிமம் புதுப்பிக்க அலைக்கழிப்பு...