இரணியல் ரயில் நிலையத்தில் பேராசிரியர் கண்டெடுத்த நகைப்பை மூதாட்டியிடம் ஒப்படைப்பு போலீசார் நடவடிக்கை

திங்கள்சந்தை, அக்.2: நெய்யூர்  பகுதியை சேர்ந்தவர் ஜாண் லியோ. பேராசிரியர். இவர் இரணியல்  ரயில் நிலைய பகுதியில் நடை பயிற்சிக்காக சென்றார். அப்போது பிளாட்பாரத்தில்  அனாதையாக கிடந்த கை பையை எடுத்து போலீசில் ஒப்படைத்தார். அந்த பையில் 2  தங்க செயின், 2 மோதிரம், 2 காப்பு, மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து நகையை  தவறவிட்ட பயணி குறித்து ேபாலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில்  நகையுடன் கிடந்த கை பை விருதுநகர் காரியப்பட்டியை சேர்ந்த பாரதி(60) என்பவருக்கு  சொந்தமானது என்பது தெரியவந்தது. இவரது மகள் வீடு திங்கள்நகர் அருகே  காருப்பாறையில் உள்ளது. மகளை பார்க்க ரயிலில் வந்துள்ளார். இரணியல் ரயில்  நிலையத்தில் இறங்கிய போது, பேக்கில் இருந்த நகைப்பை தவறியுள்ளது.  வாட்ஸ்-அப் ெசய்தி மூலம் தகவல் அறிந்த பாரதி இரணியல் போலீசாரை தொடர்பு  கொண்டார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இரணியல் காவல் நிலையம்  வந்தார். நகை பை பாரதியுடையது தான் என்பதை உறுதி செய்த போலீசார் அதை  அவரிடம் ஒப்படைத்தனர். அந்த பையில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 93  கிராம் தங்க நகைகள் இருந்துள்ளன. நகைப்பையை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த  பேராசிரியர் ஜாண் லியோவுக்கு பாரதி நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார். மேலும்  இரணியல் இன்ஸ்பெக்டர் சால்வை அணிவித்து பாராட்டினார்.


Tags : policeman ,railway station ,
× RELATED கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின்...