×

கொள்ளிடம் அருகே புத்தூரில் அங்கன்வாடி தினவிழா

கொள்ளிடம், அக்.2: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் ஆயங்குடி பள்ளம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் வட்டர அளவிலான அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில், ஊட்டச்சத்து தின விழா நடைபெற்றது.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். உலகநாதன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, திணை ஆகியவைகளால் தயார் செய்யப்பட்ட இரும்பு சத்துக்கள் அடங்கிய இயற்கை உணவுகளை பொதுமக்கள் பார்வைக்காக வைத்தனர். இதனை குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை பார்வையிட்டு உண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் புத்தூர் கடைவீதியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆசிரியர் மனோகரன் குழந்தை வளார்ச்சித்திட்ட மேற்பார்வையாளர்கள் விஜயா, பாண்டிமதி, மதியழகினி மற்றும் அங்கன்வாடி பணியாளார்கள் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தைகளை மகிழ்ச்சியுட்டும் வகையில், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் கும்மியடித்து பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags : Anganwadi Day Festival ,Budhur ,Colliad ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் மூடுபனியால் மக்கள் அவதி