- தேசிய மக்கள் நீதிமன்றம்
- மயிலாடுதுறை
- மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம்
- தேசிய சட்ட சேவைகள் ஆணையம்…
மயிலாடுதுறை, டிச.18: மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,264 வழக்குகளுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படியும் மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையிலும், வழிகாட்டுதலின்படியும் மற்றும் மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி சுதா முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் நடுவர் நீதிபதி உம்முல் பரிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவதாரணி , கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நடுவர் நீதிபதி (எண்.11) ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வுகள் அமைக்கப்பட்டது. இதில் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வாரா கடன் வழக்குகள், பண மோசடி வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், அசல் மனுக்கள் நிறைவேற்றும் விசாரணை வழக்குகள் போன்ற வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூபாய் 1 கோடியே நாற்பது லட்சம் (ரூ.1,40,00, 000) தீர்வு காணப்பட்டது. இதில் வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
