மயிலாடுதுறை, டிச.19: மயிலாடுதுறை அருகே நீடூர் தெற்கு ரயில்வே சாலையைச் சேர்ந்தவர் அழகர் மகன் தினேஷ்குமார் (23). இவரது செல்போனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் போன் கால் வந்துள்ளது. எதிர்முனையில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி பேசியுள்ளார். பின்னர் ராங்-கால் என்பதால் சிறுமி இணைப்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு தினேஷ்குமார் போனில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு சிறுமியும், தினேஷ்குமாரும் அடிக்கடி போனில் பேசிவந்துள்ளனர்.
தினேஷ்குமார் சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து, ‘உன்னை நான் தானே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என்று ஆசைவார்த்தைக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தப்பி வந்து நடந்ததை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரது தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.
