×

கடையநல்லூரில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடையநல்லூர், அக்.1: கடையநல்லூரில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து பேரிடர் தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கடையநல்லூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி தலைமை வகித்தார். தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், தாசில்தார் அழகப்பராஜா, எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் சேர்மன் முகைதீன்அப்துல்காதர் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன், பேரிடர் காலங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எப்படி தற்காத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கான முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார். மேலும் தீயணைப்பு வீரர்கள் சண்முகசுந்தரம், மாரிமுத்து, சிவமணி, ராஜ், நாராயணசாமி ஆகியோர் கட்டிடங்களில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்றும் தத்ருபமாக எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒத்திகையில் ஈடுபட்டனர்.  நிகழ்ச்சியில் தனி துணை தாசில்தார் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள் கடையநல்லூர் முருகன், புளியங்குடி ஜேசுராஜன், ஆய்க்குடி வீரலெட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள், எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Disaster Prevention Rehearsal ,Kadayanallur ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது