×

இரணியல் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த நகைப்பை போலீசில் ஒப்படைப்பு

திங்கள்சந்தை, செப்.30: திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயில் பாதையில் இரணியல் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இங்கு நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. காலை, மாலை வேளைகளில் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் நேற்று காலை நெய்யூர் பகுதியை சேர்ந்த பேராசிரியர் ஜாண் லியோ என்பவர் தனது நண்பர்களுடன் இரணியல் ரயில் நிலைய பகுதியில் நடைபயிற்சி  சென்றார். அப்போது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அனாதையாக கைப்பை ஒன்று கிடந்தது. அதை ஜாண் லியோ எடுத்து பார்த்தார். அப்போது அதில் நகைகள் மற்றும் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் இரணியல் காவல் நிலையத்தில் நகைப்பையை ஒப்படைத்தார்.போலீசார் கைப்பையை ஆய்வு செய்த போது, 2 தங்க செயின், 2 மோதிரம், 2 காப்பு மற்றும் மாத்திரை இருந்தது தெரிய வந்தது. மேலும் கைப்பையில் மதுரையை சேர்ந்த பிரபல நகை கடையின் முகவரி இருந்தது. இதையடுத்து நகை பையை ஒப்படைத்த பேராசிரியரை போலீசார் பாராட்டினர். நகையை தவற விட்ட பயணி மது ரையை சேர்ந்தவரா என்பது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Orphanage ,police station ,
× RELATED புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து...