×

அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்

அருமனை, ஜூன் 16: அருமனை கொக்கஞ்சி இரும்பிலி பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (70). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது திடீரென அவர் சுழலில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதில் இருந்து விடுபட போராடிய நிலையில் அருளானந்தம் தண்ணீரில் மூழ்கி விட்டார். சம்பவம் அறிந்து குழித்துறை தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி ஊர்மக்கள் தேடியதில் இரவு 11.30 மணி அளவில் அருளானந்தம் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த அருமனை போலீசார் அருளானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Arulanandam ,Arumanai Kokanji Irumpili ,Tamiraparani river ,Dinakaran ,
× RELATED மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய்