×

அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் அம்மன் சிலை மீட்பு: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

அஞ்சுகிராமம், ஜூன் 18: அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் தலை பகுதி உடைந்த நிலையில் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அஞ்சுகிராமத்தை அடுத்த ஆமணக்கன்விளை கடற்கரையில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள அம்மன் சிலை ஒன்று கிடந்தது. அந்த சிலையின் நெற்றியின் மேல் பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அஞ்சுகிராமம் காவல்நிலையம், லீபுரம் கிராம நிர்வாக அலுவலர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார், லீபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து லீபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா அம்மன் சிலையை கைப்பற்றி கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். ஏதாவது கோயில்களில் பழைய சிலைகளை மாற்றி விட்டு புதிய சிலைகள் வைக்கும் போது, பழைய சிலைகளை கடற்கரைகளில் கொண்டு போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் அம்மன் சிலை மீட்பு: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Anjugram ,Amman ,Kanyakumari ,Amanakanvilai beach ,Anjugramam ,Dinakaran ,
× RELATED முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி