×

அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

நாகர்கோவில், ஜூன் 18: அரசு மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப்களில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களை பராமரிக்க கணினி தொழில்நுட்பம் சார்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. தனியார் தேர்வு முகமை இந்த பணிகளை மேற்கொண்டது.

மொத்தம் 6890 பேர் ஆய்வக மேற்பார்வை பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி இந்த பயிற்சி வகுப்பு தொடங்கி 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

The post அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...