×

வீரகனூர் அருகே அரசு புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி, செப்.25: உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வீரகனூர் அருகே வேப்படி பாலக்காடு மலையடிவாரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. கெங்கவல்லி தாலுகா வீரகனூர் அருகே பச்சமலை ஊராட்சி வேம்படி பாலக்காடு மலையடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்(50), ராமச்சந்திரன் (47) ஆகியோர், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இந்த நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, அந்த நிலத்தை மீட்கக்கோரி விவசாயி நல்லியப்பன்(55) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தரிசு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

ஆனால், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நல்லியப்பன் முடிவு செய்தார். இந்நிலையில், நேற்று கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் வேப்படி பாலக்காடு மலையடிவாரத்துக்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்து 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம், மரவள்ளி மற்றும் மாட்டு கொட்டகைகள் அப்புறப்படுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயராமன் மனைவி  நளினி மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : evacuation ,Government ,Gateway ,Veeraganur ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...