×

திண்டிவனம் நகராட்சியில் 3 தலைமுறையாக வசித்துவரும் 45 குடும்பத்துக்கு பட்டா

விழுப்புரம், செப். 24:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த தாஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டிவனம் நகரம் 9வது வார்டு நகராட்சி பிரிவில் 1 ஏக்கர் 36 சென்டில் சுமார் 45 குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக வசதித்து வருகின்றனர். அரசால் வழங்கப்பட்ட குடும்பஅட்டை, ஆதார், வாக்காளர், நகராட்சி வீட்டுவசதி, குடிநீர்இணைப்பு என அனைத்தும் எங்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலம், கோயில் நிலம் மற்றும் மந்தவெளி மேய்ச்சல் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு ஓராண்டுக்குள் மாவட்ட நிர்வாகம் கணக்கு எடுத்து பட்டா வழங்க கடந்த 1ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், திண்டிவனம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளோம். தமிழக அரசு அறிவித்துள்ளபடி எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி என்றால் நபர் ஒருவருக்கு 2 சென்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அதிகமாக உள்ள இடத்திற்கு அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி விடுகிறோம்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : families ,municipality ,Tindivanam ,
× RELATED கொரோனா சூறை காற்றால் வாழ்வாதாரத்தை...