×

வைகை கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

வாழப்பாடி. செப்.24:  வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி வைகை கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.இதில் சேலம், திருச்சி, ஈரோடு, கோவை, சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 333 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் வயது வாரியாக 6, 8, 10, 12 மற்றும் 18 வயது ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து பிரிவிலும் தலா 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், முதலிடம் பிடித்த 10 பேருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் 6 வயது பிரிவில் திருச்சி ஜினிஷா அன்புச்செல்வன், ஆண்கள் பிரிவில் நாமக்கல் கேம்ஹர்சன், 8 வயது பிரிவில் சிவகங்கை உலக சாம்பியன் லக்சனா சுப்ரமணியம், ஆண்கள் பிரிவில் ஈரோடு மெய்யப்பன், 10 வயது பிரிவில் மதுரை அருள்பிரகாசம், பெண்கள் பிரிவில் திருச்சி விதுலாஅன்புச்செல்வன் வெற்றி பெற்றனர்.

அதேபோல், 12 வயது பிரிவில்  நேஷனல் சாம்பியன் கோவை நந்திஸ், பெண்கள் பிரிவில் சேலம் சகானா, 18 வயது பிரிவில் கோவை ஆகாஷ்(9),  இவர் 18 வயதான போட்டிகளில் வென்றுள்ளார். பெண்கள் பிரிவில் ஈரோடு ஸ்ரீமொழி வெற்றி பெற்றனர். போட்டியை  சேலம் செல்வம் செஸ் அகாடமி, வைகை கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தின. வைகை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் முத்துசாமி, அய்யாவு கணேசன், செல்வம் அகாடமியின் தலைவர் செல்வம், செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் போட்டிகள் நடந்தது. நடுவராக சர்வதேச நடுவர் அனந்தராமன், மாவட்ட நடுவர் சிவசுப்ரமணியம் செயல்பட்டனர். விழாவில், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் அருண், தலைவர் பாலகிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் செந்தில்வேல், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : chess competition ,Vaigai Educational Institute ,
× RELATED மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு