×

வேம்படிதாளம் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம்

இளம்பிள்ளை,  செப்.24:  வேம்படிதாளம் அருகே சின்னபெத்தானூரைச் சேர்ந்த  ஆறுமுகம் மனைவி பெருமாயி(58). இவர் பார்வை குறைபாடு ஏற்பட்டதால்,  கடந்த 6 மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், குணமாக  வில்லை. இதனால் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி திடீரென பெருமாயி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  இந்நிலையில், நேற்று மாலை நடுவனேரி ஏரி அருகே விவசாய கிணற்றில் சடலம்  மிதப்பதாக, ஆடு மேய்ப்பவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிணற்றின்  உரிமையாளர் அளித்த தகவலின் பேரில்,  மகுடஞ்சாவடி போலீசார், சடலத்தை மீட்டனர். விசாரணையில் சடலமாக கிடந்தது பெருமாயி என்பது தெரியவந்தது.  இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : Muthathi ,Vembadithalaam ,
× RELATED கூலித்தொழிலாளி சடலம் மீட்பு