ஆட்டையாம்பட்டி அருகே மணல் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்

ஆட்டையாம்பட்டி, செப்.20: ஆட்டையாம்பட்டி அருகே, மணல் கடத்திய லாரி மற்றும் பொக்லைனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள கண்டர்குலமாணிக்கம் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, மணல் கடத்துவதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் சுமதி மற்றும் சங்ககிரி கோட்டாட்சியர் அமிர்தலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் வருவதை பார்த்தவுடன் பொக்லைன் மற்றும் லாரியை நிறுத்தி விட்டு 2 டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து கிராம அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட லாரி, பொக்லைனை சேலம் கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Related Stories:

>