×

தேன்கனிக்கோட்டை அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைகிராம மக்கள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேன்கனிக்கோட்டை, செப்.19:  தேன்கனிக்கோட்டை அருகே காலிகட்டா மலை கிராமத்திற்கு சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர கேட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாளம் ஊராட்சியில் காலிகட்டா கிராமம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. மேலும், இக்கிராமத்திற்கு குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால், இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று சுகாதாரமற்ற குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துவதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் காலிகட்டா கிராமத்திற்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : Thenkanikottai ,
× RELATED தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல்...