×

கடையநல்லூர் பள்ளியில் தாத்தா, பாட்டி தின விழா

கடையநல்லூர், செப். 17:  கடையநல்லூர் பெஸ்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா -பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் அசன் இப்ராகிம் தலைமை வகித்தார். பண்பொழி ராயல் பள்ளி தாளாளர் ஹக்கீம், கவின்கிட்ஸ் பள்ளி தாளாளர் உவைஸ் முன்னிலை வகித்தனர். விழாவில் தூத்துக்குடி வஉசி கல்லூரி பேராசிரியர் ராஜா, பேச்சிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். தாத்தா -பாட்டிகளை மேடையில் பேரக்குழந்தைகளுடன் அமர வைத்து புகைப்படம் எடுத்தும், அவர்களுடைய மலரும் நினைவுகளை நினைவுப்படுத்தி உற்சாகம் அளித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தாத்தா, பாட்டிகளுக்கு பரிசு கொடுத்து கவுரவித்தனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் முகம்மது யூசுப்ராஜா, முதல்வர் ரெஜினாமேரி, துணை முதல்வர் ரதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.Tags : Grandparents Day Ceremony ,Kadayanallur School ,
× RELATED கடையநல்லூர் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா