நெல்லையில் சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா

நெல்லை, செப். 15: நெல்லையில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா நடந்தது. தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட சங்க ஆண்டு விழா, சமுதாய சான்றோர்களுக்கு பாராட்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நெல்லையில் நடந்தது. மாநில தலைவர் புளியரை ராஜா தலைமை வகித்தார். வஉசி படத்தை மதிதா இந்துக் கல்லூரி செயலாளர் செல்லையா திறந்து வைத்தார். சேர்மன் மகாராஜ பிள்ளை படத்தை நரேந்திரன் திறந்து வைத்தார். மாநில பொருளாளர் செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கணபதியப்பன், மாவட்ட துணைத் தலைவர் கணபதி முருகன், ராஜமுருகன், ஆறுமுகம்பிள்ளை, மாவட்ட துணைச் செயலாளர் சங்க வள்ளி மணாளன், சாந்திநகர் முத்து, மாநில சட்ட ஆலோசகர் கனகசபாபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் சொர்ணலதா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் பேசினர். விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Vegetarian Employees' Association ,Nellie ,
× RELATED நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன் கொன்று...