அகஸ்தீஸ்வரத்தில் தம்பதி திடீர் சாவு

தென்தாமரைக்குளம், செப். 11:  அகஸ்தீஸ்வரத்தில் கணவன், மனைவி ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி  அடுத்த அகஸ்தீஸ்வரம் குமரி அனந்தன் தெருவில் வசித்து வந்தவர் சிவகுரு  பண்டாரம் (75). இவரது மனைவி தங்கத்தாய் (65). இவர்கள் இருவரும் நேற்று  அதிகாலை 3 மணியளவில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த  மருமகள் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர்  சிகிச்சைக்காக, கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இருவரும் இறந்தது தெரிய  வந்தது. உடனடியாக இது குறித்து தென் தாமரைக்குளம் காவல் நிலையத்துக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  விசாரித்தனர்.அதைத் தொடர்ந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உடல் நலக்குறைவு காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories:

>