×

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் 712 மனுக்கள் குவிந்தன

திருவண்ணாமலை, ஆக.20: திருவண்ணாமலையில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் 712 மனுக்கள் குவிந்தது. விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், டிஆர்ஓ ரத்தினசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 712 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். குறிப்பாக, முதியோர் உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்தன. இந்நிலையில், ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மக்களவைத் தேர்தலின் போது, தவறான புகாரின் பேரில் பறிமுதல் செய்த வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்றுத்தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். மருசூர் கிராமத்திற்கு மினி லாரியில் கொண்டு வந்து சப்ளை செய்யப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை பெறுவதற்காக, கடந்த ஏப்ரல் 12ம் தேதி பொது இடத்தில் வரிசையாக சிலிண்டர்களை வைத்திருந்தனர்.

அவ்வாறு, வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் மக்களவைத் தேர்தலுக்காக இலவசமாக வழங்குவதாக கிடைத்த தவறான புகாரின் பேரில் 54 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர். உரிய விசாரணை முடிந்த பிறகும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களிடம் சிலிண்டர் திரும்ப வழங்காமல் அலைக்கழிப்பதால், அவற்றை திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோல், சேத்துப்பட்டு பேரூராட்சி 11வது வார்டில் உள்ள பாஞ்சாலியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலுக்கு அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும், செங்கம் தாலுகா இறையூர் அண்ணா நகரைச் சேர்ந்த 7 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள், கடந்த 2011ம் ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற குழு கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். மேலும், போதுமான வருமானம் இல்லாததால், தவணைத் தொகையை சில காலம் செலுத்த முடியவில்லை. தற்போது, நிலுவையில் உள்ள அசலைவிட வட்டி அதிகமாகிவிட்டது. அவற்றை செலுத்த முடியாமல் தவிக்கிறோம்.

மேலும், ஜப்தி, கைது ேபான்ற நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகின்றனர். எனவே, வட்டியை தள்ளுபடி செய்தால், கடன் தவணையை கட்டி முடித்துவிடுகிறாம் என மனுவில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் வருகை அதிகமாக இருந்தது. அதனால், மனுக்களை அளிக்க நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்துக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மனுவை கணினியில் பதிவு செய்து ஒப்புகை ரசீது வழங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. அதனால், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிபட்டனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...