×

சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி மண்டபத்தில் சிலை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்படும். இந்தி எதிர்ப்பு போரில் உயிர்த்தியாகம் செய்த தியாகி சின்னசாமிக்கு கீழப்பழுவூரில் சிலை அமைக்கப்படும். முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை வைக்கப்படும். பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்கப்படும். சமூக சீர்திருத்த பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை நிறுவப்படும். தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டையில் திருவுருவச்சிலை நிறுவப்படும். சென்னை மாகாண முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு சென்னையில் சிலை, நாமக்கல்லில் அரங்கம் அமைக்கப்படும். கடலூரில் சுதந்திர போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

The post சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Rabindranath Tagore ,Ranimary College ,Chennai ,Minister ,Saminathan ,Rani Mary College ,Chennai. ,Marudu ,Ranimeri College, Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...