கெங்கவல்லி அருகே செந்நாய் கடித்து 6 ஆடுகள் பலி

கெங்கவல்லி, ஜூன் 25: கெங்கவல்லி அருகே செந்நாய்கள் கடித்து குதறியதில் 6ஆடுகள் உயிரிழந்தன.கெங்கவல்லி தாலுகா, கூடமலை அருகே தெற்குகுட்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொன்நிலா மற்றும் சந்திரா. இவர்கள் தங்களது தோட்டத்தில் பட்டி அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வழக்கம் போல இரவு பட்டியில் அடைத்து விட்டு சென்றனர். நேற்று காலை, பட்டிக்கு வந்து பார்த்த போது, 6ஆடுகளும் மர்ம விலங்கு கடித்ததில் இறந்து கிடந்ததை கண்டு அதிச்சியடைந்தனர். இது குறித்து, தம்மம்பட்டி வனச்சரக அலுவலர் அசோக்குமார் மற்றும் கூடமலை கால்நடை மருத்துவர் வினோத் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அவர்கள், செந்நாய் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
Tags : Kengavalli ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்