×

குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, ஜூன் 19: கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில்முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
கல்லூரியில் நடந்த வரவேற்பு விழாவிற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். மாணவர்களை கல்லூரி முதல்வர் விஜிலா கென்னடி வரவேற்றார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர்  மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், 14 மாணவர்களுக்கான முழுக்கல்வி உதவிக்கான பொறுப்பேற்பு ஆவணத்தை நிர்வாக அறங்காவலர் வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kumaraguru Arts Science College ,
× RELATED பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப்...