விக்கிரவாண்டி பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

விக்கிரவாண்டி, ஜூன் 19:விக்கிரவாண்டி  பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பொறுப்பு   கலியமூர்த்தியிடம் மகாத்மா காந்தி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், கடந்த 30ஆண்டுகளாக, விக்கிரவாண்டி  பஸ் நிலையம் பின்புறம் கார்  மற்றும் வேன்களை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வருகிறோம். இந்நிலையில்  அப்பகுதியில் தனி நபர் ஒருவர் கடைகள் கட்டி அதன் எதிரே ஆக்கிரமிப்பு  செய்வதால் எங்களால் வாகனங்களை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளனர்.Tags : bus stand ,Vikramwadi ,
× RELATED புதுச்சேரி பழைய பேருந்து நிலையம்...