×

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூன்18: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூன்றில் ஒரு பங்கு அளவு மூடப்பட்டாலும் மது விற்பனையை தொடர்ந்து அதிகரிப்பதில் தமிழக அரசு அதிகஅக்கரை காட்டி வருவது கவலையளிக்கிறது.குறிப்பாக மது விற்பனைஎன்பது ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம் வரைஅதிகரித்து வருகிறது. விற்பனை நேரத்தை குறைத்தும் கூட மது விற்பனை குறையவில்லை. இந்த மது பழக்கத்தினால் தமிழகத்தில் பல குடும்பங்கள்சீரழிந்து வருகின்றன.விபத்துகள்மற்றும் கொலை குற்றங்கள்உட்பட பெருமளவில் அதிகமாவதற்கு இது காரணமாகிவிட்டது. இன்னொருபுறம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கான குடிநீர் பிரச்னைஎன்பது தலைவிரித்தாடுகிறது.அண்மையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்டதகராறில் தஞ்சை அருகே உள்ள விளார் வடக்கு காலனியை சேர்ந்த சமூகஆர்வலர் ஆனந்த்பாபு என்பவர் கடந்த 6ம் தேதி அடித்து கொல்லப்பட்டசம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.அதேபோல் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பிரச்னையால் ஒரு பெண்ணுக்கு கத்திகுத்து விழுந்துள்ளது.இவ்வளவுக்கு பிறகும் தமிழக அரசு குடிநீர் பஞ்சம் பற்றிகவலைப்படாமல் உள்ளது.எனவே தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுத்திட வேண்டும் என்றார்.

Tags : Communist ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...