×

முத்துப்பேட்டையில் இலவச இருதய, பொது மருத்துவ முகாம்

முத்துப்பேட்டை, மே 19: முத்துப்பேட்டை புதுத்தெரு ஜிம்மா பள்ளி வாசலில் இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை கேஜி மருத்துவமனை இருதய சிறப்பு மருத்துவர் நித்தியன், இருதயம் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் சேகு ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் சித்தார்த்தன் கோகுல் பாரதி, நிர்மல், பூஜா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் இருதய சம்பந்தமான அனைத்துக்கும் அதேபோல் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். மேலும் எக்கோ, இசிஜி, சக்கரை நோய், இரத்த அழுத்தம் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் இருதய மற்றும் பல்வேறு உடல் நலம் குறித்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர்.

இதில் பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், ஐக்கிய ஜமாஅத் முகமது அலி, முன்னாள் ரோட்டரி மாவட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி, சஹாப்தீன், ரோட்டரி தலைவர் ஜாம்பை கல்யாணம், செயலாளர் பாலசுந்தர், பொருளாளர் பகுருதீன் மற்றும் நிஜாம் முகமது, பொது மேலாளர் அப்பாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் இலவச இருதய, பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Pudutheru Jimma ,Muthupet ,Nithyan ,Coimbatore KG Hospital ,Sekhu ,
× RELATED முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்