ராஜராஜ சோழன் குறித்து அவதூறு சினிமா இயக்குனர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மன்னார்குடி டிஎஸ்பியிடம் முக்குலத்து புலிகள் அமைப்பு புகார்

மன்னார்குடி, ஜூன் 14: ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் மன்னார்குடி டிஎஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக்கிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி உண்மைக்கு புறம்பான தவறான கருத்துக்களை பேசியுள்ளார். மேலும் ராஜராஜன் சோழன் ஆட்சி காலத்தில் தலித் மக் களுக்கு சொந்தமான நிலங்களை சூழ்ச்சியின் அடிப்படையில் பறித்து கொண்டார் என்றும், பெண்களை ராஜராஜன் கேவலமாக நடத்தினார் என்றும் அடிப் படை ஆதாரங்கள் இல்லாமல் அவதூறாக பேசியுள்ளார்.இதன் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலில் இயக்குனர் ரஞ்சித் இறங்கியுள்ளார். அவரின் விஷமத்தனமான கருத்து மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு தொடர்ந்து பொதுவெளியில் பேசிவரும் இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் சுரேஷ் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: