×

திருமானூர் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அரியலூர், ஜூன் 14: திருமானூர் பகுதி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.4,100 அபராதம் விதிக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள பெட்டிக்கடை, மளிகை கடை, டீ கடை, பேக்கரி மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின்கீழ் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது திருமானூர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடைகளில் நடந்த ஆய்வில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4,100 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகை ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Tags : area shops ,
× RELATED நாகூர் பகுதி கடைகளில் 200 கிலோ...