×

நாகூர் பகுதி கடைகளில் 200 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் ரூ.25,000 அபராதம் விதிப்பு

நாகை, பிப். 5: நாகை நகராட்சி எல்லையில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆணையர் ஏகராஜ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 51 மைக்ரானுக்கு குறைவான அளவில் இருந்த தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 200 கிலோ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் வைத்திருந்தால் திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் ஏகராஜ் கூறினார்.

Tags : area shops ,Nagore ,
× RELATED அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில்...