மானூர் அருகே ஆடு திருடிய 4 பேர் கைது

மானூர், ஜூன் 14:  மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (55), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், கடந்த 9ம் தேதி இரவு தனது 20 ஆடுகளை அவரது தோட்டத்திலுள்ள ஆட்டுக்கொட்டகையில் அடைத்துள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது 4 ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மானூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ அருண் நாராயணன் வழக்கு பதிந்து தேவர்குளத்தை சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்தராஜ் (43), லிங்கராஜ் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (23),  சீனிப்பாண்டி மகன் கடல்ராஜ் (27), இரண்டும் சொல்லானை சேர்ந்த முருகன் என்ற வண்டு முருகன் (30) ஆகிய 4 பேரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து ஆட்டுக்கான மதிப்பீட்டு தொகை ரூ.16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான பூபதி மகன் சின்னத்துரை (27) என்பவரை போலீசார் தேடி வருகிறார்.

Tags : Manoor ,
× RELATED செய்யாறு அருகே பரபரப்பு ஆடு...