×

நெல்லை அருகே வெவ்வேறு சம்பவம் கல்லூரி மாணவி, வாலிபர் பரிதாப சாவு

நெல்லை, ஜூன் 13: சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் வீமன். இவரது மகள் சித்ரா(20). கல்லூரி மாணவியான இவர் தீராத வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் ஓடைத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : incident college student ,Nellai ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி