×

மழை பெய்ய வாய்ப்பு மழையை நம்பி தீவிர உழவு வாரச்சந்தை எதிரே கடைபோட தெருவோர கடைக்காரர்கள் மனு

தேனி, ஜூன் 12: தேனி வாரச்சந்தை எதிரே பெரியகுளம் சாலையின் இருபுறமும் கடை அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெருவோர கடைக்காரர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனியில் வாரந்தோறும் சனிக்கிழமை பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை கூடுகிறது. நகராட்சி மூலமாக நடத்தப்படும் இந்த வாரச்சந்தையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் மளிகை, வீட்டு உபயோக சாமான்கள், காய்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கோழி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்கின்றனர். வாரச்சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடம்சாலையின் மேற்கு புறம் அமைந்துள்ளது. வாரச்சந்தைக்கு வெளியே தேனி-பெரியகுளம் மெயின்சாலையின் இருபுறமும் வாரச்சந்தையன்று சுமார் 100க்கும் அதிகமான சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன.

சாலையோர கடைகளால் வாரச்சந்தையன்று இச்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்கள் பெரும் இடையூறுக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தேனி போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், தெருவோரத்தில் கடைகள் அமைக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
இதனால் தேனி மாவட்ட தெருவோர கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்தனர். இம்மனுவில் வழக்கம் போல தேனி வாரச்சந்தை எதிரே பெரியகுளம் சாலையில் தெருவோரக்கடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : shoppers ,street ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்